சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புத் சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் முயற்சியை எதிர்த்தும் காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜி.வி.மதியழகன் தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நகர தலைவர் சேரன், வட்டாரத் தலைவர்கள் சம்பத், தென்னேரி சுகுமாரன், ஐஎன்டியுசி மாவட்டப் பொருளாளர் ராமநீராளன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
இந்தப் போராட்டத்தில், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை மத்திய அரசு நீர்த்துப் போகச் செய்வதாகக் கூறி அதற்குக் கண்டனம் தெரிவித்து கட்சிப் பிரமுகர்கள் பேசினர்.
திரளான காங்கிரஸ் தொண்டர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
செங்கல்பட்டில்...
தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும், மத்திய அரசைக் கண்டித்து கல்பாக்கம், புதுப்பட்டினம் இசிஆர் சாலையில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்த வலியுறுத்தியும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் கொண்டுவந்த தடையை உடனடியாக நீக்க வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்தும், மக்கள் விரோதப் போக்கில் பாஜக ஆட்சி நடத்துவதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதுப்பட்டினத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு கட்சியின் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சி.ஆர்.பெருமாள் வரவேற்றார்.
புதுப்பட்டினம் நகர தலைவர் பாண்டியன், மாவட்ட இளைஞரணித் தலைவர் ஜான்சன், ஊடகப் பிரிவு தலைவர் சபாபதி, செங்கல்பட்டு நிர்வாகிகள் கண்ணதாசன், ஆர்.கே.செல்வமணி, ஜே.பாஸ்கர், மாமல்லபுரம் சிவராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, கட்சியின் அகில இந்திய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஜெயக்குமார் உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
முன்னாள்ஊராட்சி மன்றத் தலைவர் பட்டிப்புலம் பன்னீர்செல்வம், முன்னாள் மாவட்டத் தலைவர் அண்ணாதுரை, மாநில செயற்குழு உறுப்பினர்கள் புத்தன், பழவேலி காமராஜ், ராஜீவ் காந்தி போர்ப்படைத் தலைவர் கணேஷ், மாவட்டப் பிரதிநிதி எம்.ஷெரீஃப் உள்ளிட்டோர் மத்திய அரசைக் கண்டித்து உரையாற்றினர். சின்னக்கடை ராஜேந்திரன் வில்சன்ட் உள்ளிட்ட மாவட்டம் நகரம், ஒன்றியம் பேரூர் நிர்வாகிகள் மற்றும் பெண்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

