சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

காரில் கடத்தப்பட்ட ரூ.2 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்

பரனூர் சுங்கச்சாவடி அருகில் ஒரு காரில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புடைய மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். 

Updated On :3 ஆகஸ்ட் 2018, 4:15 am IST


பரனூர் சுங்கச்சாவடி அருகில் ஒரு காரில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புடைய மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். 
செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகில் போலீஸார் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் பல்வேறு வகையிலான 382 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. ரூ.2 லட்சம் மதிப்புள்ள அந்த மது பாட்டில்களையும், அவற்றைக் கடத்தி வரப் பயன்படுத்தப்பட்ட காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். 
இது தொடர்பாக சென்னை போரூரைச் சேர்ந்த பாலா (30) மற்றும் சேகர் (28) ஆகிய இருவரையும் கைது செய்த செங்கல்பட்டு கலால் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் இருவரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.