பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்: ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி 

சிங்கப்பெருமாள் கோவிலுக்கும், மறைமலை நகருக்கும் இடையே திங்கள்கிழமை காலையில் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் பணியில் பணியாளர் ஈடுபட்டனர். 

Published On :


சிங்கப்பெருமாள் கோவிலுக்கும், மறைமலை நகருக்கும் இடையே திங்கள்கிழமை காலையில் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் பணியில் பணியாளர் ஈடுபட்டனர். 
இதனால் ரயில்கள் காலதாமதமாக வந்ததையடுத்து பயணிகள் அவதிக்குள்ளாயினர். 
சிங்கப்பெருமாள்கோவில் - மறைமலைநகர் இடையில் ரயில்வே பணியாளர்கள் திங்கள்கிழமை காலையில் தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர். இது குறித்து செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இத்தகவலை அடுத்து அவ்வழியாக வந்த சென்னை புறநகர் ரயிலும், விரைவு ரயில்களும் கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள்கோவில் என பல்வேறு இடங்களில் நடுவழியில் நிறுத்தப்பட்டன. 
ரயில்வே தண்டவாளப் பராமரிப்பு பணியாளர்கள் விரைந்துவந்து தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்த பகுதியை தற்காலிகமாக சரிசெய்தனர். ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விரைவு ரயில்களை இயக்கத் தொடங்கினர். 
முன்னதாக, விரிசலை சரிசெய்யும் பணி சுமார் 2 மணிநேரம் நடைபெற்றதால் காலதாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் குறித்த நேரத்தில் உரிய இடங்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.