காஞ்சிபுரத்தில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.