விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இருசக்கர வாகனங்கள்மோதல்: ஒருவர் சாவு

புழுதிவாக்கம் கூட்ரோடில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.

News image
Updated On :5 ஜூன் 2018, 9:16 pm

DIN

புழுதிவாக்கம் கூட்ரோடில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.
மதுராந்தகத்தை அடுத்த துறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகந்நாதன். அவரது மகன் பாலாஜி (26) தன் குழந்தையின் பிறந்த நாள் அழைப்பிதழை உறவினர்களுக்குக் கொடுக்க வீட்டில் இருந்து திங்கள்கிழமை இரவு பைக்கில் புறப்பட்டார். அவர் கருங்குழி மேலவலம் பேட்டை நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். 
அப்போது எதிர் திசையில் நெல்வாய் கூட்ரோடு செல்ல ஒருவர் பைக்கில் வந்து கொண்டிருந்தார். புழுதிவாக்கம் கூட்ரோடு பக்கமாக இரு வாகனங்களும் வந்தபோது அவை நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், பாலாஜி பலத்த காயம் அடைந்தார். மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து மதுராந்தகம் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.