ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

இட ஒதுக்கீட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழசை சௌந்தரராஜனைக் கண்டித்து மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் அருகில் பாமகவினர் வியாழக்கிழமை கண்டன

News image

 செங்கல்பட்டில்  தமிழிசை செளந்தரராஜனைக்  கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  பாமகவினர்.

Updated On :29 ஜூன் 2018, 3:03 am IST

இட ஒதுக்கீட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழசை சௌந்தரராஜனைக் கண்டித்து மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் அருகில் பாமகவினர் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்துவதை பாஜக மாநிலத் தலைவர் தமிழசை சௌந்தரராஜன் கொச்சைப்படுத்தி பேசியதாகவும், அவரது பேச்சினைக் கண்டிப்பதாகவும் கூறி காஞ்சிபுர தெற்கு மாவட்ட பாமக சார்பாக மதுராந்தகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாநில துணை பொதுச் செயலர் பொன் கங்காதரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் வா.கோபாலக்கண்ணன் வரவேற்றார். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக நிர்வாகிகள் அ.கோ.குணசேகரன், முன்னாள் மாவட்டச் செயலர் குமரவேல், சரவணன், நடராஜன், சகாதேவன், சக்திவேல், மின்னல் மூர்த்தி, சாந்தமூர்த்தி, ஏழுமலை, சிவராமன் உள்பட 100க்கும் மேற்பட்ட பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில்...
 பாமக நிறுவனர் ராமதாஸை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை இழிவுபடுத்திப் பேசியதாகக் குற்றம்சாட்டி, அதைக் கண்டித்து பாமகவினரும், வன்னியர் சங்கத்தினரும் செங்கல்பட்டில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
சில நாள்களுக்கு முன்பு சிங்கபெருமாள்கோயிலில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் தமிழிசை பேசினார். அப்போது, அவர் பாமக நிறுவனர் ராமதாஸை மரம் வெட்டி என தரக் குறைவாகப் பேசியதாக பாமகவினர் குற்றம்சாட்டினர். தமிழிசையின் பேச்சைக் கண்டிக்கும் வகையில் செங்கல்பட்டில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் கணேச மூர்த்தி தலைமை வகித்தார். காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் இளந்தோப்பு வாசு, நிர்வாகிகள் என்ஜிஜிஓ நகர் ரவி, சரணவன், புண்ணியகோட்டி, பொற்செல்வன், அப்பு உள்ளிட்ட மாவட்ட, நகரம், ஒன்றியம் பேரூர் கிளை பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகள் கலந்துகொண்டனர். அவர்கள் தமிழிசை செளந்தரராஜனைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.