காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்து சென்ற இளம்பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 9:51 pm

DIN

ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்து சென்ற இளம்பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குள்பட்ட பட்டுநூல் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சுதா (26). இவர், அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். 
இந்நிலையில் சுதா புதன்கிழமை பட்டுநூல்சத்திரம், ராமானுஜர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இரு இளைஞர்கள் சுதா அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் சுதா அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.