விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள், பதாகைகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு

காஞ்சிபுரத்தில் காந்தி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர்

Updated On :29 மார்ச் 2018, 10:47 pm


காஞ்சிபுரத்தில் காந்தி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் பா.பொன்னையா வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
காஞ்சிபுரத்தில் இருவழிப் பாதையாக இருந்த காந்தி சாலை, பச்சையப்பன் சாலை, மேட்டுத் தெரு உள்ளிட்ட பிரதான சாலைகளை ஒருவழிப் பாதையாக போலீஸார் அண்மையில் மாற்றியமைத்தனர். இதன் பின்னர், ஆங்காங்கே நிறுத்தப்பட்ட வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும், காந்தி சாலையில் உள்ள வணிகர்கள் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, மீண்டும் இருவழிப் பதையாக மாற்றக் கோரி கடையடைப்புப் போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், ஆட்சியர் பா.பொன்னையா வியாழக்கிழமை பிரதான சாலைகளான காந்தி சாலை, காமராஜர் சாலை, மேட்டுத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். 
அப்போது, சாலைகளின் இருபுறங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள், விளம்பரப் பதாகைகள், கட்சி பேனர்கள், ஆக்கிரப்புகள் உள்ளிட்டவற்றை அகற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அத்துடன் காந்தி சாலையில் உள்ள பட்டுக் கடைகளுக்கு வரும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக வாகன நிறுத்துமிடம் அமைக்க இடங்களையும் பார்வையிட்டு ஆலோசனை செய்தார். ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் ராஜு, முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத் கணேசன், வட்டாட்சியர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.