திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

செங்கல்பட்டில் ஆட்சியர் நேரில் ஆய்வு: சுகாதாரப் பணி ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

செங்கல்பட்டு நகராட்சியில் சுகாதாரப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா திங்கள்கிழமை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

News image
Updated On :6 நவம்பர் 2018, 2:44 am IST


செங்கல்பட்டு நகராட்சியில் சுகாதாரப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா திங்கள்கிழமை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
நகாரட்சி அலுவலகம், வருவாய்த் துறை, மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் அவர் இந்த ஆய்வை மேற்கொண்டார். அப்போது டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட மர்மக் காய்ச்சல் உருவாகும் வகையில் சுகாதாரப் பணியில் குறைபாடுகளைக் கண்டறிந்தார். கொசுக்கள் உருவாகாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறித்தார். 
நகாரட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவகத்தை உள்ளடக்கிய வருவாய்த்துறை, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் ஆய்வு நடத்தினார். அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது மருத்துவமனையில் குப்பைக் கழிவுகள் அதிகம் உள்ளதாகவும், இதனால் சுகாதாரச் சீர்கேடு உருவாகி கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் என்றும் அவர் கூறினார். சுகாதாரப் பணிகளுக்கு ஒப்பந்தம் எடுத்துள்ள பத்மாவதி என்ற ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதத்தை ஆட்சியர் விதித்தார். மேலும், அரசு மருத்துவமனையில் செவிலியர் தங்கும் குடியிருப்புப் பகுதியல் டெங்கு தடுப்புப் பணி குறைபாடு மற்றும் சீர்கேட்டைக் கண்டறிந்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 
மாவட்ட ஆட்சியருடன் சுகாதாரத் துறை துணை இயக்குநர் பழனி, நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி, சுகாதார அலுவலர், செங்கல்பட்டு கோட்டாட்சியர் முத்து வடிவேல், வட்டாட்சியர் பாக்கியலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மருத்துவமனை ஆய்வின்போது மருத்துவக் கண்காணிப்பாளர் சுதாகர், டாக்டர்கள் தீனதயாளன், கந்தன்கருணை உள்ளிட்டோர் ஆட்சியருடன் இருந்தனர். அப்போது உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகள், கழிப்பறைகள் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். 
இதனையடுத்து செங்கல்பட்டு கிராமிய காவல் நிலையத்திற்குச் சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வழக்குகள் தொடர்பாகப் பிடிபட்டு அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்களைக் கண்டார். அந்த வாகனங்களை அப்புறப்படுத்தி, ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய கிராமிய காவல்துறைக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். அதற்கு, கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் இளங்கோவன், அந்த வாகனங்களை விரைவில் அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகத் தெரிவித்தார். 
இது தவிர, காவலர் குடியிருப்புப் பகுதிகள், மாவட்ட சிறைச்சாலை ஆகியவற்றில் உள்ள கழிவுநீர்க் கால்வாய்கள் உள்பட செங்கல்பட்டு நகரில் முக்கிய பகுதிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.