மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் திருட்டு

புதுப்பட்டு கிராமத்தில் பூட்டிய வீட்டின் பின்புறக் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களை மர்ம

Updated On :22 அக்டோபர் 2018, 9:44 pm


புதுப்பட்டு கிராமத்தில் பூட்டிய வீட்டின் பின்புறக் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.
மதுராந்தகத்தை அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பிலால். அவரது மகன் முகமது ராமீஸ் பாகர் (29), சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 
இந்நிலையில், அவர் புதுப்பட்டில் உள்ள தன் வீட்டுக்கு கடந்த திங்கள்கிழமை வந்தார். அப்போது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த 2 ஏசி இயந்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் திருடு போயிருந்தன.
இந்தத் திருட்டு தொடர்பாக ராமீஸ் பாகர் மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.