
காவலர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை திருட்டு
திருப்போரூர் அருகே காவலர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை மற்றும் ரூ. 40 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திருப்போரூர் அருகே காவலர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை மற்றும் ரூ. 40 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திருப்போரூரை அடுத்த மாம்பாக்கம் அருகே மேலைக்கோட்டையூர் பகுதியில் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் தேசிங்கு ராஜன் (43). இவர், செவ்வாய்க்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு பணிக்குச் சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 15 சவரன் நகை மற்றும் ரூ. 40ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தாழம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







