மின்இணைப்பு வழங்காததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து மனுதாரர் சக்திவேல் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே மலைநகரில் மனைவி மற்றும் 3 மகள்களுடன் வசித்து வருகிறேன். பட்டா இல்லாததால் மின் இணைப்பு பெற முடியவில்லை. எங்களது மகள்கள் மின்வசதி இல்லாததால் படிக்க இயலவில்லை. அவ்வப்போது, வீட்டுக்குள் விஷ ஜந்துக்களால் பாதிக்கப்படுகிறோம்.
இதுதொடர்பாக, கடந்த மாதம் 15 -ஆம் தேதி அச்சிறுப்பாக்கம் மின்வாரியம் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் கருப்புத் துணி கட்டி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். அப்போது, உதவி கோட்ட பொறியாளர் மனோகரன் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 3 நாள்களில் மின் இணைப்பு வழங்குவதாக உறுதியளித்தார்.
ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களது மகள்களின் பள்ளிக் கல்வியை கருத்தில் கொண்டு மின் இணைப்பு உடனே வழங்க ஆட்சியர் உத்தரவிடவேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி! - முதல்வர் விஜய் உத்தரவு

ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!

தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


