காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகம் முன்பு இளைஞர் ஒருவர் புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் முன்பு எப்போதும் போலீஸாரின் நடமாட்டம் இருப்பதோடு காவலர்களும் பாதுகாப்புப் பணியில் இருப்பர்.
இந்நிலையில், இளைஞர் ஒருவர் புதன்கிழமை காலையில் எஸ்.பி.அலுவலகம் முன்பு தன் கையில் வைத்திருந்த தின்னர் எனப்படும் ரசாயனத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த போலீஸார் ரசாயனத்தை குடிக்க விடாமல் அவரைத் தடுத்து நிறுத்தினர். மேலும், அவரை அழைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டம், செய்யூர் பகுதியைச் சேர்ந்த பாபு என்பது தெரிய வந்தது. குடும்பப் பிரச்னை காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததால் ரசாயனத்தைக் குடித்துள்ளார். அதையடுத்து, அவரை மனநலஆலோசனை மையத்துக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


