கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உத்தரமேரூரில் 500 ஆண்டு பழமையான கோயிலில் தங்க புதையல் கண்டெடுப்பு

உத்தரமேரூரில் 500 ஆண்டு பழமையான குழம்பேஸ்வரர் கோயிலில் தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

News image

கண்டெடுக்கப்பட்ட தங்க புதையல்.

Updated On :13 டிசம்பர் 2020, 8:57 am

DIN

உத்தரமேரூரில் 500 ஆண்டு பழமையான குழம்பேஸ்வரர் கோயிலில் தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் குழம்பேஸ்வரர் கோயில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த, கோயில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் கோயில் கருவறையின் நுழைவுவாயிலின் முன் உள்ள கருங்கற்களாலான படிக்கட்டுகளை திருப்பணிக் குழுவினர் அகற்றினர். அப்போது அதன் கீழ் துணியால் சுற்றப்பட்ட சிறிய அளவிலான மூட்டை இருந்தது.  அதை பிரித்து பார்த்தபோது ஏராளமான தங்க ஆபரணங்கள் இருந்தன. மேலும் வருவாய்த்துறை அனுமதி இல்லாமல் 500 ஆண்டு கால பழமையான கோயிலை முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்.

Story image

அப்பொழுது கோயிலில் படிக்கட்டை ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு பெயர்க்கும் பொழுது குவியல் குவியலாக தங்கம் கிடைத்ததாக வருவாய் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கிடைக்கப்பெற்ற தங்கத்தை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்வதற்காக கோயில் அமைந்துள்ள பகுதிக்கு செல்லும் பொழுது அப்பகுதி மக்களுக்கும் வருவாய் துறைக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 500 ஆண்டு கால பழமையான கோவிலை எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் தன்னிச்சையாக அப்பகுதியைச் சார்ந்த நபர்கள் இடித்து தரைமட்டமாக்கி புதிதாக ஒரு கோயில் கட்டுவதற்கு தீர்மானித்தது இப்பணியை மேற்கொள்ளும் பொழுது கோயில் நுழைவாயில் உள்ள படிக்கட்டின் கீழ் தோராயமாக 100 சவரன் தங்க நகைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

Story image

இந்தநிலையில் புதையலாக கிடைத்த பழங்காலத்து தங்கத்தை அப்பகுதி பொதுமக்கள் சிலர் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 16 ஆம் நூற்றாண்டில் தங்கம் பயன்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அன்னியர்கள் படையெடுப்பு காரணமாக அக்காலத்தில் வாழ்ந்த முன்னோர்கள் போர் பதற்றத்தின் அச்சுறுத்தல் காரணமாகவே சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட நகைகளை இந்த கோயிலின் பல்வேறு பகுதிகளில் புதைத்து வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது கண்டெடுக்கப்பட்ட நகைகள் யாவும் சுவாமி சிலைகளுக்கு திரு ஆபரணங்களாக சாத்தப்படும் நகைகள் என நம்பப்படுகிறது.

Story image

பல அறிய தெய்வ சிலைகள் எல்லாம் தற்போது காணவில்லை என்று கூறுகிறார்கள் ஊர்மக்கள். தற்போது பொதுமக்களால் கையகப்படுத்தப்பட்ட தங்க நகைகளின் மதிப்பீட்டு குறித்து வருவாய்த் துறையும் காவல் துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.