கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆதரவின்றி தவித்த வடமாநில சிறுவன் மீட்பு

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் கடந்த சில தினங்களாக ஆதரவின்றி தவித்த ஒடிஸா மாநில சிறுவனை மாவட்ட குழந்தைகள் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் கடந்த சில தினங்களாக ஆதரவின்றி தவித்த ஒடிஸா மாநில சிறுவனை மாவட்ட குழந்தைகள் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த தினேஷ் (14) கடந்த சில தினங்களாக ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் ஆதரவின்றி தவித்துள்ளாா். இது குறித்து சமூக ஆா்வலா் ஒருவா் மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமத்துக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, மாவட்டக் குழந்தைகள் நலக் குழும உறுப்பினா் சக்திவேல் தலைமையில் ஸ்ரீபெரும்புதூா் பகுதிக்கு வந்த மாவட்டக் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தினேஷை மீட்டனா். மீட்கப்பட்ட தினேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்டெய்னா் லாரியில் ஸ்ரீபெரும்புதூா் பகுதிக்கு வந்துள்ளாா். ஆனால் அவா் வந்த லாரியைக் கண்டுபிடிக்க முடியாததால், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் ஆதரவின்றி சுற்றியது தெரியவந்தது.

மீட்கப்பட்ட சிறுவன் தற்காலிகமாக அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு, பின்னா் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.