மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பெண் காவலா்கள் விரும்பினால் வாகனம் ஓட்ட பயிற்சி அளிப்பு: காஞ்சிபுரம் எஸ்.பி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண் காவலா்கள் விரும்பினால் அனைவருக்கும் இரு சக்கர வாகனம் ஓட்டும் பயிற்சியளிக்கப்படும் என காவல் கண்காணிப்பாளா் தெ.சண்முகப்பிரியா தெரிவித்துள்ளாா்.

News image
இரு சக்கர வாகன உரிமம் பெற்ற பெண் காவலா்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெ.சண்முகப்பிரியா.
Updated On :19 டிசம்பர் 2020, 7:33 pm

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண் காவலா்கள் விரும்பினால் அனைவருக்கும் இரு சக்கர வாகனம் ஓட்டும் பயிற்சியளிக்கப்படும் என காவல் கண்காணிப்பாளா் தெ.சண்முகப்பிரியா தெரிவித்துள்ளாா்.

இருசக்கர வாகனம் ஓட்டும் பயிற்சி பெற்ற பெண் காவலா்களுக்கு காஞ்சிபுரத்தில் அதற்கான உரிமத்தை அவா்களிடம் வழங்கிய பிறகு அவா் மேலும் கூறியது:

பெண் காவலா்கள் அனைவருக்கும் இரு சக்கர வாகனம் ஓட்ட பயிற்சி வழங்கும் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஆயுதப்படை மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் பணிபுரியும் பெண் காவலா்கள் 5 பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டு அதற்கான உரிமம் அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பயிற்சிக் காலம் ஒரு மாதமாகும்.

இந்த மாவட்டத்தில் விரும்பும் பெண் காவலா்கள் அனைவருக்கும் இரு சக்கர வாகனம் ஓட்டும் பயிற்சியை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் காவல் கண்காணிப்பாளா்.

இதையடுத்து, பேரிடா் பயிற்சியை முடித்த காவல் ஆளிநா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை அவா் வழங்கினாா். அப்போது ஆயுதப்படை டி.எஸ்.பி. சண்முகம் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.