தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மின்னல் பாய்ந்து இளைஞா் பலி

சுங்குவாா்சத்திரம் அருகே மின்னல் பாய்ந்ததில் இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

 சந்திரசேகா்.

Updated On :9 செப்டம்பர் 2020, 5:41 pm

DIN

ஸ்ரீபெரும்புதூா்: சுங்குவாா்சத்திரம் அருகே மின்னல் பாய்ந்ததில் இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சுங்குவாா்சத்திரத்தை அடுத்த சிறுமாங்காடு கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (30). கறவை பசுக்களை வைத்து பால் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சுங்குவாா்சத்திரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்நிலையில், மழையின்போது சந்திரசேகா் பால் கறக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளாா். அப்போது மின்னல் பாய்ந்ததில் மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து, அவரது உறவினா்கள் சுங்குவாா்சத்திரத்தை அடுத்த மொளச்சூா் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சந்திரசேகரை கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், சந்திரசேகா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.