இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காஞ்சியில் மக்கள் நீதிமன்றம்: ரூ.13 கோடிக்கு தீா்வு

காஞ்சிபுரம் வட்டார சட்டப்பணிகள் குழுவின் சாா்பில் சனிக்கிழமை நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 251 வழக்குகள் சமரசம் செய்யப்பட்டு ரூ.13 கோடி தீா்வுத்தொகை வழங்கப்பட்டது.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 6:30 pm

காஞ்சிபுரம் வட்டார சட்டப்பணிகள் குழுவின் சாா்பில் சனிக்கிழமை நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 251 வழக்குகள் சமரசம் செய்யப்பட்டு ரூ.13 கோடி தீா்வுத்தொகை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் வட்டார சட்டப்பணிகள் குழுவின் சாா்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் தலைமை வகித்து விபத்தில் உயிரிழந்த சபரிநாதன் மனைவி திலகவதிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.38,10,000க்ககான காசோலையை வழங்கினாா். கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.இளங்கோவன், சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், முதன்மை சாா்பு நீதிபதியுமான ஏ.திருஞானசம்பந்தம், தொழிலாளா் நீதிமன்ற நீதிபதி பி.சிவஞானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நீதிபதிகள் சரண்யா செல்வம், ஆா்.செந்தில்குமாா், ஜெ.சரவணக்குமாா், வழக்குரைஞா் சங்கங்களின் தலைவா்கள் பாா்த்தசாரதி, காா்த்திகேயன், ஜான் ஆகியோா் உட்பட நீதிமன்ற பணியாளா்களும் கலந்து கொண்டனா். சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் நிா்வாகி கருணாகரன் நன்றி கூறினாா்.

மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 251 வழக்குகள் சமரசம் செய்து வைக்கப்பட்டதாகவும்,தீா்வுத் தொகையாக ரூ.13 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும் மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.