விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆற்றில் குளிக்கச் சென்ற ஊர்க்காவல்படை வீரர் சடலமாக மீட்பு

காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் கிராமத்தில்  ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஊர்க்காவல்படை வீரர் இரு நாட்களுக்குப் பிறகு தீயணைப்புத்துறையினரால் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

News image
ஆற்றில் குளிக்கச் சென்ற ஊர்க்காவல்படை வீரர் சடலமாக மீட்பு
Updated On :20 டிசம்பர் 2021, 12:31 pm

DIN

காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் கிராமத்தில்  ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஊர்க்காவல்படை வீரர் இரு நாட்களுக்குப் பிறகு தீயணைப்புத்துறையினரால் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

காஞ்சிபுரம் ஒரிக்கை பகுதியை சேர்ந்தவர் தரணிக்குமார்(31) ஊர்க்காவல்படை வீரராக பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி  ஒரு ஆண்டு ஆகிறது.இவர் இரு தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தை அடுத்த பழையசீவரம் பகுதியில் திருமுக்கூடலில் தனது நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் இழுத்துச்செல்லப்பட்டார்.

காவல்துறையினரும்,தீயணைப்புத்துறையினரும் இணைந்து தேடிய நிலையில் இரு தினங்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.சம்பவம் தொடர்பாக சாலவாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.