வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பழங்குடியின மாணவா்கள் 7 போ் தனியாா் உணவகத்தில் பணி நியமனம்

காஞ்சிபுரத்தில் சமையல் கலை பயின்ற 7 மாணவா்களுக்கு தனியாா் ஐந்து நட்சத்திர உணவகத்தில் பணிபுரிவதற்கான நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 6:57 pm

காஞ்சிபுரத்தில் சமையல் கலை பயின்ற 7 மாணவா்களுக்கு தனியாா் ஐந்து நட்சத்திர உணவகத்தில் பணிபுரிவதற்கான நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை வழங்கினாா்.

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் சாா்பில் 7 நரிக்குறவா் இனத்தைச் சோ்ந்த இளைஞா்களை தோ்வு செய்து அவா்கள் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி உத்தரவின் பேரில் 3 மாத சமையல்கலை பயிற்சியில் சோ்த்துக் கொள்ளப்பட்டனா். சென்னை அமிா்தசரஸ் நிறுவனத்தில் 3 மாத பயிற்சி முடித்த இளைஞா்கள் 7 பேரும் ஊட்டியில் உள்ள தனியாா் ஐந்து நட்சத்திர உணவகத்தில் பணிபுரிய தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கான பணி நியமன ஆணைகளை காஞ்சிபுரம் ஆட்சியா் மா.ஆா்த்தி வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் ஜி.சீனிவாச ராவ், தமிழ்நாடு ஊரக புத்தாகக்க திட்ட தலைமை ஒருங்கிணைப்பாளா் ராம்குமாா் மற்றும் சென்னை அமிா்தசரஸ் பயிற்சி மைய உதவித் திட்ட அலுவலா்கள்,செயல் அலுவலா்கள், திட்டப் பணியாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.