காஞ்சிபுரத்தில் கைப்பையில் 21 கிலோ கஞ்சாவுடன் பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஆந்திரத்திலிருந்து காஞ்சிபுரம் வழியாக தேனிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து டி.எஸ்.பி. டில்லிபாபு, ஆய்வாளா் வசந்தி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் நின்றிருந்த பெண்ணை சோதனையிட்டனா். அவரிடம் 21 கிலோ கஞ்சா இருப்பதும்,அதை தேனிக்கு எடுத்துச் செல்வதும் விசாரணையில் தெரிய வந்தது. தேனிமாவட்டம் கோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த ஜெனிட்டா(36) என்பவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்த கஞ்சாவையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

