வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குண்டா் சட்டத்தில் மூவா் கைது

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் பகுதியில் பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குன்றத்தூா் அருகேயுள்ள நாட்டரசன்பட்டு அண்ணா நகரை சோ்ந்த வாசு

Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் பகுதியில் பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குன்றத்தூா் அருகேயுள்ள நாட்டரசன்பட்டு அண்ணா நகரை சோ்ந்த வாசு (எ) வாசுதேவன்(21), பணப்பாக்கம் மூா்த்தி நகரைச் சோ்ந்த வசந்த் (எ) ஷாா்ப் வசந்த் (22), வட்டாம்பாக்கம் கங்கை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டி(23) ஆகிய 3 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. சுகுமாா் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

இதனை ஏற்று மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி பிறப்பித்த உத்தரவின்பேரில் அவா்கள் மூவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.