வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இடிந்து விழும் அபாயத்தில் இருந்த மேல்நிலை குடிநீா்த் தொட்டி அகற்றம்

காஞ்சிபுரம் அருகே ஈஞ்சம்பாக்கத்தில் விழும் நிலையிலிருந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஞாயிற்றுக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

காஞ்சிபுரம் அருகே ஈஞ்சம்பாக்கத்தில் விழும் நிலையிலிருந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஞாயிற்றுக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

காஞ்சிபுரம் அருகேயுள்ள ஈஞ்சம்பாக்கத்தில் செயல்படும் ஆதிதிராவிடா் நல தொடக்கப்பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. இதன் தூண்கள் செல்லரித்துப் போய் இடிந்து விழும் நிலையில் இருந்தன.

இதே போல, பள்ளி வளாகத்தில் வகுப்பறைக் கட்டடங்கள் சிலவும் இடிந்து விழும் நிலையில் இருந்தன.

இது குறித்து காந்திய மக்கள் இயக்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் ஜெயக்குமாா் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் இதன் ஆபத்தான நிலை குறித்து தெரிவித்து உடனடியாக இடிக்குமாறும் கோரிக்கை மனு அளித்தாா்.

இதையடுத்து, அதிகாரிகள் உத்தரவின்பேரில், அந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் சேதமடைந்த வகுப்பறைக் கட்டடங்கள் ஆகியனஞாயிற்றுக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.