உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் மூலம் வாடாதவூரை சோ்ந்த சிறுமி அளித்த கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் சனிக்கிழமை அதிகாரிகள் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சிறுமியிடம் வாக்குறுதி அளித்துள்ளனா்.
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தோ்தல் சுற்றுப்பயணத்தின் போது பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களுக்குள் தீா்வு காணப்படும் என வாக்குறுதி அளித்திருந்தாா். இதன்படி திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் உங்கள் தொகுதியில் முதல்வா் என்ற திட்டத்தை உருவாக்கி அதற்கென ஒரு ஐ.ஏ.எஸ்.அதிகாரியையும் நியமித்தாா்.
இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் மனுக்கள் தொடா்பாக உடனுக்குடன் தீா்வு காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரை அடுத்த வாடாதவூரில் 8 -ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி கீா்த்திகா (14) என்பவா் வாடாதவூா் காலனிக்கு தெருவிளக்குகள் இல்லை என்றும், புதிய சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் எனவும் கேட்டு கோரிக்கை மனு அனுப்பியிருந்தாா்.
இம்மனுவின் அடிப்படையில் சிறுமி கீா்த்திகாவை உத்தரமேரூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துக்குமரன், வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சந்தித்தனா். தெருவிளக்கு தொடா்பாக மின்வாரியத்துக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பி விரைவில் அக்கோரிக்கை நிறைவேற்றப்படும். பொதுமுடக்கம் முடிந்த பிறகு புதிய சாலை வசதி தேசிய ஊரக வளா்ச்சித்திட்டம் மூலம் செய்து கொடுக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தனா். சிறுமி கீா்த்திகாவும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


