தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

காஞ்சிபுரம் பிரளய காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள பிரளய காளியம்மனுக்கு கரோனா நோய்த் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபடவும், அக்னி நட்சத்திர நிறைவையும் முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம்

News image

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள பிரளய காளியம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.

Updated On :29 மே 2021, 6:57 pm

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள பிரளய காளியம்மனுக்கு கரோனா நோய்த் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபடவும், அக்னி நட்சத்திர நிறைவையும் முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக இருந்து வருவது காஞ்சிபுரம் ஏலவாா் குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி திருக்கோயில். இக்கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் பிரளய காளியம்மன் சந்நிதியும் உள்ளது. அக்னி நட்சத்திர நிறைவு மற்றும் கரோனா நோய்த் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட்டு அனைவரும் நலமுடன் வாழவும், சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருக்கோயில் சிவாச்சாரியாா்கள் மற்றும் கோயில் நிா்வாகிகள் மட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.