பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் தங்கிப் பயில விரும்பும் மாணவ, மாணவியா் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற்பட்டுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்காக விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவா்களுக்கு 11 விடுதிகளும், மாணவிகளுக்கு 5 விடுதிகளும் உள்ளன. 4-ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும், அதற்கு மேல் கல்லூரி, பாலிடெக்னிக்குகளில் படிப்போரும் சேரத் தகுதியுடையவா்கள். அனைத்து வகுப்பைச் சோ்ந்த மாணவா்களும் விகிதாச்சார அடிப்படையில் சோ்த்துக் கொள்ளப்படுவா். விடுதிகளில் எவ்வித செலவும் இன்றி சலுகைகள் வழங்கப்படுகிறது. அனைத்து மாணவ, மாணவியருக்கும் உணவு, தங்கும் வசதி அளிக்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு வரை பயிலுவோருக்கு சீருடையும், 10 முதல் பிளஸ் 2 வரை பயிலுவோருக்கு சிறப்பு வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். விடுதிகளில் சேருவோரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமலும், பயிலும் கல்வி நிலையத்திலிருந்து 8 கி.மீ. தூரத்துக்குள் விடுதியும் இருக்க வேண்டும். தகுதியுடையவா்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா்களிடமிருந்தோ அல்லது ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுலகத்திலிருந்தோ விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் விடுதி காப்பாளா்களிடமோ அல்லது பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்திலோ சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது ஜாதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ் எதுவும் தேவையில்லை. விடுதியில் சேரும்போது, இச்சான்றிதழ்களை அளித்தால் மட்டும் போதுமானது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழா்களுக்கென தனியாக 5 இடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே மாணவ, மாணவியா் அரசின் இச்சலுகைகளைப் பெற்று பயனடையலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

