காஞ்சிபுரம் அருகே புளியம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கணவரும் அதே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றதால் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே புளியம்பாக்கத்தில் வசித்து வருபவர் தென்காசியைச் சேர்ந்த அனு(21). இவரது கணவர் பாலமுருகன் திருநெல்வேலியை அடுத்த சிவகிரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த நிலையில் புளியம்பாக்கத்தில் தங்கியிருந்த அனுவை கணவர் பாலமுருகன் சம்பவ நாளன்று சந்திக்க வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் பாலமுருகன் தான் வைத்திருந்த கத்தியால் அனுவை குத்தி கொலை செய்தார். பின்னர் பாலமுருகனும் தான் வைத்திருந்த அதே கத்தியால் கழுத்திலும், வயிற்றிலும் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகிலிருந்தவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததையடுத்து பாலமுருகன் செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த அனுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக வாலாஜாபாத் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரண நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாட்ஸ்ஆப் சேனல் பதிவுகளை பார்ப்பது எத்தனை பேர்? அறிவது எப்படி? பயன்கள் என்னென்ன?

விம்கோ நகர் - மாதவரம் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் புதிய தடம்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழை!
ஹோர்முஸ் தொடர்பாக ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தை! அமெரிக்கா புறக்கணிப்பு!
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay



