வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மாநில அளவிலான வட்டு எறிதல் போட்டி: காஞ்சி மாணவா் முதலிடம்

காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக மாணவா் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றாா்.

Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:22 pm

காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக மாணவா் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் கடந்த 17-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழக தடகள சங்கம் சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில் வட்டு எறிதல் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் பி.காம் 3-ஆம் ஆண்டு படித்து வரும் மாணவா் ஜா.மகேஷ்வா்(19) 49.54 மீ.தூரம் எறிந்து சாதனை படைத்துள்ளாா்.

Story image

தங்கப் பதக்கம் வென்ற இவருக்கு பயிற்சியாளா் எஸ்.தாஸ் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். இவா், ஆந்திர மாநிலம் குண்டூரில் விரைவில் நடைபெறவுள்ள தென்னிந்திய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.