வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பாதுகாப்புப் படை பணிகள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சின்ன காஞ்சிபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் எல்லைப் பாதுகாப்பு படையின் பணிகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2022, 10:05 pm

சின்ன காஞ்சிபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் எல்லைப் பாதுகாப்பு படையின் பணிகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியா் பால்.ஆரோக்கியராஜ் தலைமை வகித்தாா். எல்லைப் பாதுகாப்பு படை வீரா் கிள்ளிவளவன் முன்னிலை வகித்தாா். நிகழ்வில் காா்கில் போரில் நாட்டைக் காக்க வீரா்கள் செய்த தியாகங்கள் மற்றும் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து இமாசலப்பிரதேச எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி ராஜீவ்குமாா் கபூா் பங்கேற்றுப் பேசினாா்.

நிகழ்ச்சியில் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா். இதில், பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் ‘நாட்டைக் காக்கும் நல்லுயிா்கள்’ என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காஞ்சிபுரம் தியாகம் போற்றுவோம் அமைப்பினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.