பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காஞ்சிபுரத்தில் 3 பேரூராட்சிகளையும் கைப்பற்றியது திமுக

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத்,உத்தரமேரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 3 பேரூராட்சிகளிலும் திமுகவே அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 10:11 am

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத், உத்தரமேரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 3 பேரூராட்சிகளிலும் திமுகவே அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உத்தரமேரூர் ஆகிய 3 பேருராட்சிகள் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆகியனவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை பொன்னேரிக்கரை அருகில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பன்னீர்செல்வம் தலைமையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வாலாஜாபாத் பேரூராட்சி

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு 17 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது. 14,094 வாக்காளர்களில் 10,861 நபர்கள் வாக்களித்திருந்தனர். வாலாஜாபாத் பேரூராட்சிக்கு மட்டும் வாக்குப்பதிவு சதவிகிதம் 77.06 வார்டு உறுப்பினர்கள் 15 பதவிகளுக்கு 58 பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையில் திமுக 10, அதிமுக 5 என்ற விகிதத்தில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 81 பேர் போட்டியிட்டனர்.25 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. 22,395 வாக்காளர்களில் 15,470 பேர் வாக்களித்திருந்தனர். வாக்குப்பதிவு சதவிகிதம் 69.08 ஆகவும் இருந்தது. வாக்கு எண்ணிக்கையில் திமுக 6, அதிமுக 3, காங்கிரஸ் 1, பாமக 1, சுயேச்சைகள் 4 பேர் உட்பட திமுக அதிக இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மட்டும் 4 சுயேச்சைகள் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரமேரூர் பேரூராட்சி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 74 பேர் போட்டியிட்டனர்.27 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது.22041 வாக்காளர்களில் 16762 பேர் வாக்களித்திருந்தனர்.வாக்குப்பதிவு சதவிகிதம் 76.05 சதவிகிதம்.வாக்கு எண்ணிக்கையின்படி திமுக 14,அதிமுக 3,பாமக 1 உட்பட திமுக அதிகமான இடங்களை பிடித்து உத்தரமேரூர் பேருராட்சியை கைப்பற்றியிருக்கிறது.

3 சுற்று வாக்கு எண்ணிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 3 பேருராட்சிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் நடைபெற்றது.3 பேரூராட்சிகளிலும் வாக்கு எண்ணிக்கையின் போது தலா 3 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடந்தது. இவற்றில் ஸ்ரீபெரும்புதூர் 9 சுற்றுகளாகவும்,மற்ற இரு பேரூராட்சிகளுக்கும் தலா 6 சுற்றுக்களாகவும் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

வாக்கு எண்ணிக்கை நடந்த இடத்தில் காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.