சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன்  தொடக்கம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன்  தொடக்கம்.

Updated On :8 மார்ச் 2022, 3:51 am

DIN

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு திருக்கோவில் சிவாச்சாரியார்கள் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நடத்தி கொடியினை ஏற்றினார்கள். 

இதனைத் தொடர்ந்து ஏலவார்குழலி அம்மனுக்கும் ஏகாம்பரநாதர் சுவாமிக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. கொடியேற்ற விழாவில் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன், ஆய்வாளர் பிரித்திகா, கோயில் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

இவ்விழாவினை முன்னிட்டு தினசரி காலையிலும் மாலையிலும் சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வருகின்றனர். 

இம்மாதம் 13ம் தேதி காலையில் அறுபத்தி மூன்று நாயன்மார்கள் வீதி உலாவும், இரவு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது. மறுநாள் 14ம் தேதி மகா ரதம் எனப்படும் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. பதினெட்டாம் தேதி அதிகாலையில்  திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.  இரவு தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா வருகின்றனர். 

இம்மாதம் 21ம் தேதி 108 கலசாபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ந‌.தியாகராஜன் தலைமையிலான விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.