தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஒரே நாளில் 600 வழக்குகளை முடிக்க திட்டம்: காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி பேச்சு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் மக்கள் நீதிமன்றங்களில் ஒரே நாளில் 600 வழக்குகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக

News image
பயனாளிக்கு வங்கிக்காசோலை வழங்கும் காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிபதி ஜெ.சந்திரன் மற்றும் நீதிபதிகள், வழக்குரைஞர்கள்.
Updated On :12 மார்ச் 2022, 8:15 am

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் மக்கள் நீதிமன்றங்களில் ஒரே நாளில் 600 வழக்குகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக மக்கள் நீதிமன்றத்தை தொடக்கி வைத்து பேசிய மாவட்ட அமர்வு நீதிபதி ஜெ.சந்திரன் பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றத்தை தொடக்கி வைத்து மாவட்ட அமர்வு நீதிபதி ஜெ.சந்திரன் பேசியது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சிறப்பாக முடிக்க மொத்தம் 11 அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளது. 

இவற்றின் மூலம் ஒரே நாளில் 600 வழக்குகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தீர்வுத்தொகை மொத்தம் ரூ.15 கோடியாக இருக்கும். மக்கள் நீதி மன்றங்களால் நேரம் வீணாகுதல், பணம் விரயம், அலைச்சல், ஆகியன தடுக்கப்படுகிறது. இரு தரப்பினரும் சமாதானமாக போவதால் இருவருக்குமே வெற்றி என்ற நிலையை எட்டுகின்றனர். கடந்த 2007, 2008 ஆம் ஆண்டுகளில் தொடங்கிய வழக்குகளையும் மக்கள் நீதிமன்றத்தில் முடிவுக்கு கொண்டு வர இருக்கிறோம். இதன் மதிப்பு மட்டுமே ரூ.10 கோடியாகும்.

விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், தொழிலாளர் நலன் மற்றும் சிறு குற்ற வழக்குகள் ஆகியன உட்பட மொத்தம் 600 வழக்குகளுக்கு தீர்வு காண முடிவு செய்துள்ளோம் என்றும் ஜெ.சந்திரன் பேசினார். மக்கள் நீதிமன்ற தொடக்க விழாவிற்கு கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.இளங்கோவன், முதன்மை சார்பு நீதிபதி மற்றும் சட்டப்பணிகள் குழுவின் தலைவர் பி.திருஞானசம்பந்தம், தொழிலாளர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசு வழக்குரைஞர் பி.கார்த்திகேயன் வரவேற்று பேசினார். தொடக்க விழாவில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்.ராஜராஜேஸ்வரி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சரண்யா செல்வம், நீதிபதிகள் எஸ்.செந்தில்குமார், சரவணன், சங்க செயலாளர்கள் ஜான், தி.கார்த்திகேயன் மற்றும் வழக்குரைஞர்கள், வழக்காடிகள், நீதிமன்ற பணியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முதன்மை நிர்வாக உதவியாளர் சதீஷ்ராஜ் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.