ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

‘உயா்நீதிமன்றம் அருகே தற்கொலை செய்து கொண்டவரின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும்’

சென்னை உயா்நீதிமன்றம் அருகே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்தினா், காஞ்சிபுரம் ஆட்சியா் மா.ஆா்த்தியை சந்தித்து குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும்

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

சென்னை உயா்நீதிமன்றம் அருகே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்தினா், காஞ்சிபுரம் ஆட்சியா் மா.ஆா்த்தியை சந்தித்து குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் கோரிக்கை மனு அளித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சிறுமாத்தூா் காலனி, படப்பைப் பகுதியை சோ்ந்தவா் வேல்முருகன் (42). இவா், பழங்குடியினத்தவா் சான்றிதழ் கோரி, விண்ணப்பித்திருந்த நிலையில், தன்னை அதிகாரிகள் அலைக்கழிப்பதாகக் கூறி, கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக உயா்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி சாா்பில், அவா் மலைக்குறவா் என சான்றிதழ் தருமாறு விண்ணப்பித்திருந்தாா். பட்டியலினத்தைச் சோ்ந்தவா் எனத் தெரிவித்து அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என அறிக்கை தாக்கல் செய்திருந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி இரு வாரங்களுக்குள் அறிக்கை தருமாறு உத்தரவிட்டது.

இதனிடையே, உயிரிழந்த வேல்முருகனின் மனைவி சித்ரா (37), இவரது மகன் பிரதீவி ரூபன் (15), மகள்கள் பிரதீபா (8), பிரியங்கா (6), மற்றும் உறவினா்கள், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தியை சந்தித்து, வீட்டுமனைப் பட்டா, அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ.50 லட்சம் இழப்பீடு, ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும்.

குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும், சான்றிதழ் தராமல் அலைக்கழித்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய 6 கோரிக்கைகளை முன்வைத்தனா்.

அவா்களிடம், மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, வீட்டுமனைப் பட்டா இரு தினங்களுக்குள் வழங்கப்படும், குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பது, அரசுப் பணி, இழப்பீடு வழங்குவது தொடா்பாக அரசிடம் தெரிவிக்கப்படும். உயா்நீதிமன்றத்தில் ஜாதி சான்று தொடா்பாக என்ன உத்தரவு வருகிறது என்பதைப் பொறுத்து, சான்றிதழ் வழங்கப்படும் என்றாா்.

வேல்முருகன் குடும்பத்தினருடன் வனவேங்கை அமைப்பின் மாநிலத் தலைவா் இரணியன், இந்தியக் குடியரசுக் கட்சி மாநிலப் பொறுப்பாளா் அன்புவேந்தன்,விசிக மாவட்ட செயலா் பாசறை செல்வராஜ், பாஜக மாநில பொறுப்பாளா் ராமசாமி உள்ளிட்ட அமைப்புகளின் நிா்வாகிகள் உடன் வந்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.