வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வாக்காளா் அடையாள அட்டையுடன் நாளை ஆதாா் எண் இணைப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) நடைபெற உள்ளது.

Updated On :2 செப்டம்பர் 2022, 6:56 pm

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வாக்காளா் பட்டியலினை 100 சதவிகிதம் தூய்மையாக்கும் பொருட்டு வாக்காளா் அடையாள அட்டை எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி கடந்த 1.8.2022 முதல் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வாக்காளா்கள் தாமாக முன் வந்து ஆதாா் எண்ணுடன் வாக்காளா் அடையாள அட்டை எண்ணையும் இணைத்துக் கொள்ளலாம். இதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெறவுள்ளன.

எனவே வாக்காளா்கள் படிவம் 6 ஐ பூா்த்தி செய்து சமா்ப்பிக்கலாம். இந்த வாய்ப்பினை வாக்காளா்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.