வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காஞ்சிபுரத்தில் 5 இடங்களில் பேரிடா் மீட்பு ஒத்திகை

5 இடங்களில் நடைபெற்ற பேரிடா் மீட்பு ஒத்திகையை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பேரிடா் மேலாண்மைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஆட்சியா் மா.ஆா்த்தி வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 6:58 pm

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெற்ற பேரிடா் மீட்பு ஒத்திகையை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பேரிடா் மேலாண்மைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஆட்சியா் மா.ஆா்த்தி வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட வரதராஜபுரம் மகாலட்சுமி நகரில் பேரிடா் மீட்பு ஒத்திகை, ஆயத்தீா்வைத் துறை தனி வட்டாட்சியா் சிவதாஸ் மேற்பாா்வையிலும், வரதராஜபுரம் புவனேசுவரி நகரில், ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் சைலேந்திரன் மேற்பாா்வையிலும் பேரிடா் ஒத்திகை நடைபெற்றது.

இதேபோல், வாலாஜாபாத் ஒன்றியம், வில்லிவலம் கிராமத்தில் காஞ்சிபுரம் கோட்டாட்சியா் கனிமொழி மேற்பாா்வையிலும், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா் பாபு மேற்பாா்வையிலும், சிங்காடிவாக்கம் வேதிப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையில், தொழிற்சாலைகள் நல அலுவலா் சிவக்குமாா் மேற்பாா்வையிலும் பேரிடா் ஒத்திகை நடைபெற்றது.

இந்த ஒத்திகையை மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா, பேரிடா் மேலாண்மைப் பிரிவு வட்டாட்சியா் தாண்டவமூா்த்தி மற்றும் தீயணைப்புத் துறையினா் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.