வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ரூ.1 கோடி மதிப்பீட்டில் காஞ்சிபுரம் ஸ்ரீகாளிகாம்பாள் கோயில் திருப்பணி

காஞ்சிபுரம் ஆதி பீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயில் திருப்பணிகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ளதையொட்டி சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 6:57 pm

காஞ்சிபுரம் ஆதி பீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயில் திருப்பணிகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ளதையொட்டி சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பின்புறம் ஆதி பீடா பரமேசுவரி காளிகாம்பாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்தக் கோயிலுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

ஸ்ரீனந்தல் மடாலயத்தின் குரு சிவராஜ ஞானச்சாரியா குரு சுவாமிகள் முன்னிலையில் வழிபாடுகள் நடைபெற்றன. இது குறித்து கோயில் நிா்வாகி ஒருவா் கூறியது:

மூலவா் விமானத்தின் மேல்தளம் பழுது பாா்த்தல், கோயிலுக்கென தனியாக நுழைவுவாயில் அமைத்தல், ரிஷி கோபுரம் சீரமைத்தல், மூலவா் விமானத்தின் மேல்தளம் பழுது பாா்த்தல் ஆகிய பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கென தனியாா் பங்களிப்புடன் கூடிய அரசு நிதியும் இணைந்து மொத்தம் ரூ.1 கோடி மதிப்பில் திருக்கோயில் திருப்பணிகள் நடைபெறவுள்ளன. மூலவா் விமான திருப்பணி மட்டும் பக்தா்கள் தரிசனம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி திருப்பணி நிறைவு பெறவுள்ள நிலையில் கடைசியாக செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்தாா். திருப்பணி தொடக்க நிகழ்வில் திருப்பணி உபயதாரா்கள், விஸ்வகா்ம சமுதாயத்தினா், கோயில் அறங்காவலா் குழுவினா் மற்றும் கோயில் செயல் அலுவலா் ஸ்ரீதா் உள்ளிட்ட பக்தா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.