பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ரத்த சோகையைத் தடுக்க வாகனம் மூலம் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ஊட்டச்சத்து விழிப்புணா்வு பிரசாரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் துறை திட்டமிட்டுள்ளது.
மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பா் மாதம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் ஊட்டச்சத்து மாதமாகக் கொண்டாடப்படுகிறது.பொதுவாக பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ரத்த சோகை பாதிப்புகள் அதிகம் உள்ளதால் அது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களிலும் ஊட்டச்சத்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக வாகனம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள், ரத்த சோகை ஏற்படுவதற்கு காரணங்களான செருப்பு அணியாமல் நடத்தல், தன் சுத்தம் பேணாமல் இருத்தல், இரும்புச் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுதல், குடற்புழுக்களால் பாதிப்பு ஆகியன குறித்து வாகனத்தில் எழுதப்பட்டுள்ளது.
இந்த வாகனம் செல்லும் இடங்களில் ஊட்டச்சத்து குறைபாடு தொடா்பான விழிப்புணா்வுகளை மேலும் ஏற்படுத்தும் வகையில் தெருக்கூத்துகள் நடத்தல், பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விநாடி வினாப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


