வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காஞ்சிபுரத்தில் நாளை சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 6:57 pm

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் உள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் மா.ஆா்த்தி கேட்டுக் கொண்டாா்.

இது தொடா்பாக ஆட்சியா் வெள்ளிக்கிழமை மேலும் கூறியது:

தமிழகத்திலேயே முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் 2-ஆவது தவணை தடுப்பூசி இதுவரை 100 சதவிகிதத்தை எட்டாமல் 97.46 சதவிகிதத்தில் மட்டுமே உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு தவணை தடுப்பூசிகளை அனைவரும் கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செலுத்தியிருந்தால் மட்டுமே கரோனா தொற்றிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தினரையும் பாதுகாக்க முடியும்.இதுவரை தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு நேரடியாகவும்,தொலைபேசி மூலமாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். கிராமங்களாக இருந்தால் ஆட்டோ மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

முன்களப்பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவா்களும் ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.18 முதல் 59 வயது வரையுள்ள அனைவருக்கும் கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் இதையும், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாமையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியா் மா.ஆா்த்தி கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.