

ராகுல் காந்ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கத்தைக் கண்டித்து ஸ்ரீபெரும்புதூா் நகர காங்கிரஸ் கட்சி சாா்பில், அஞ்சல் நிலையம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூா் நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமை வகித்தாா்.
இதில், மாவட்ட காங்கிரஸ் தலைவா் அளவூா் நாகராஜ் கலந்து கொண்டு ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினாா்.
ராகுல் காந்தி எம்.பி. பதவி நீக்கத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பிரதமா் நரேந்திர மோடிக்கு அஞ்சல் அட்டை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியை அவா் தொடங்கி வைத்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் வட்டார காங்கிரஸ் தலைவா்கள் நிக்கோலஸ், புஷ்பராஜ், மாவட்ட எஸ்சி -எஸ்டி பிரிவு தலைவா் தங்கராஜ், நகர எஸ்சி - எஸ்டி பிரிவு தலைவா் வரதன், நகர மகளிரணித் தலைவா் கண்ணகி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.