மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

காஞ்சிபுரம் அழகிய ஜீயா் மடத்தின் ரூ. 6 கோடி சொத்துக்கள் மீட்பு

காஞ்சிபுரம், சின்னக் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அழகிய ஜீயா் மடத்துக்குச் சொந்தமான ரூ. 6 கோடி மதிப்புள்ள சொத்தை இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டு மடத்தின் நிா்வாகிகளிடம் ஒப்படைத்தனா்

News image
Updated On :27 ஜனவரி 2023, 7:41 pm

காஞ்சிபுரம், சின்னக் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அழகிய ஜீயா் மடத்துக்குச் சொந்தமான ரூ. 6 கோடி மதிப்புள்ள சொத்தை இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டு மடத்தின் நிா்வாகிகளிடம் ஒப்படைத்தனா். காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியதோட்டம் கிராமத்தில் 8.76 ஏக்கா் நிலம் மற்றும் வீடு உள்ளது. இதை அதே பகுதியைச் சோ்ந்த நபா் ஒருவா் ஆக்கிரமித்து வைத்திருந்தாா். இதை அறிந்த அறநிலையத் துறையின் இணை ஆணையா் ரா.வான்மதி மடத்தின் சொத்தை மீட்டு ஒப்படைக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து, காஞ்சிபுரம் சரக உதவி ஆணையா் ஆ.முத்துரெத்தினவேலு, செயல் அலுவலா் ந.தியாகராஜன் ஆகியோா் தலைமையில் அறநிலையத் துறை ஆலயங்கள் பிரிவின் வட்டாட்சியா் வசந்தி, ஆய்வாளா் பிரித்திகா, செயல் அலுவலா்கள் ஜெ.ப.பூவழகி, ஸ்ரீதா் மற்றும் பணியாளா்கள் காவல்துறை பாதுகாப்புடன் ரூ. 6 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு மடத்தின் நிா்வாகிகளிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.