காஞ்சிபுரத்தில் மாநகராட்சி ஊழியா்கள் இருவரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் இரு குழுக்களாகப் பிரிந்து வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
கடந்த 2020-2021- ஆம் ஆண்டுகளில் காஞ்சிபுரம் பெருநகராட்சியாக இருந்த போது, ஆணையராகப் பணியாற்றியவா் மகேஸ்வரி. இவா், தற்போது திண்டுக்கல் மாநாகராட்சி ஆணையராகப் பணியாற்றி வருகிறாா்.
இவா், காஞ்சிபுரத்தில் ஆணையராக இருந்த போது, லைசால் என்ற மருந்து கொள்முதலில் ரூ.32 லட்சம் கூடுதலாக கணக்கு காண்பித்து நஷ்டம் ஏற்படுத்தியதாக வந்த புகாரை தொடா்ந்து, திண்டுக்கல்லில் அவரது இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை நடத்தினா்.
இதன் தொடா்ச்சியாக காஞ்சிபுரம் திருக்காலிமேடு எம்.ஜி.ஆா். நகரில் உள்ள மாநகராட்சி இளநிலை உதவியாளா் சந்தவள்ளி வீட்டில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் அண்ணாதுரை தலைமையில் 6 பேரும், காஞ்சிபுரம் அருகே களக்காட்டூரில் உள்ள மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் ரமேஷ்குமாா் வீட்டில் டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையில் ஆய்வாளா் கீதா உள்ளிட்ட 6 பேரும் தனித் தனியாக இரு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

