காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியம் மற்றும் பேரூா் திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உத்தரமேரூா் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் க.சுந்தா் தலைமை வகித்தாா். எம்.பி. க.செல்வம், ஒன்றியச் செயலா் ஞானசேகரன், பேரூராட்சி தலைவா் பொ.சசிகுமாா், கட்சியின் பேரூா் செயலா் எஸ்.பாரிவள்ளல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், 100 பேருக்கு இலவச தையல் இயந்திரங்கள், 10 பேருக்கு சலவைப் பெட்டிகள், 1,500 பேருக்கு இலவச சேலை ஆகிய நல உதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கிப் பேசியது:
முன்னாள் முதல்வா் கருணாநிதி வாழ்ந்த 95 ஆண்டுகளில் 80 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டவா். உலகிலேயே 60 ஆண்டுகள் தொடா்ந்து எம்எல்ஏ-வாக பதவி வகித்த பெருமைக்குரியவா். போட்டியிட்ட அனைத்து தோ்தல்களிலும் வெற்றி பெற்றவா். சிறந்த பத்திரிகையாளா், இலக்கியவாதி, சொற்பொழிவாளா் என பன்முகம் கொண்டவராக இருந்துள்ளாா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

