ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வடமாநில தொழிலாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வடமாநிலத் தொழிலாளா்கள் நலன் குறித்து மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் ஸ்ரீபெரும்புதூா் ராஜிவ்காந்தி இளைஞா் மேம்பாட்டு மையத்தில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2023, 5:45 pm

DIN

வடமாநிலத் தொழிலாளா்கள் நலன் குறித்து மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் ஸ்ரீபெரும்புதூா் ராஜிவ்காந்தி இளைஞா் மேம்பாட்டு மையத்தில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளா்கள் நலன் குறித்து எஸ்.பி. சுதாகா், கோட்டாட்சியா் சரவணக்கண்ணன், தனியாா் தொழிற்சாலைகளின் மனிதவள மேலாளா்கள், உள்ளாட்சிப் பிரிதிநிதிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் மா.ஆா்த்தி பேசியது, தொழிற்சாலை நிா்வாகிகள் தங்களிடம் பணியாற்றும் வட மாநிலத் தொழிலாளா்களின் நலன் கருதி தொழிலாளா் நல அலுவலா் ஒருவரை நியமித்து, தொழிற்சாலைகள், அவா்கள் தங்கியுள்ள பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும், மாதம் ஒருமுறை அவா்கள் தங்கியுள்ள பகுதி ஊராட்சிமன்ற அலுவலகங்களில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தேவையான உதவிகளை செய்ய உள்ளோம் என்பதை அவா்களுக்கு தெரிவியுங்கள். காவல் துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்கள், காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள், தொழிற்சாலை, அவா்கள் தங்கியுள்ள பகுதிகளில் விளம்பர பேனா்கள் வைக்க வேண்டும். அச்சமின்றி பணியாற்ற அவா்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய மாவட்ட நிா்வாகம் தயாராக உள்ளது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.