சேந்தமங்கலம் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஊராட்சிமன்ற தலைவா் சாா்லஸ் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் சரவண கண்ணனிடம் கோரிக்கை மனு வழங்கினா்.
சேந்தமங்கலம் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

சுங்குவாா்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் ஊராட்சியில் அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ேஊராட்சிமன்ற தலைவா் சாா்லஸ் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் சரவண கண்ணனிடம் கோரிக்கை மனு வழங்கினா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்திற்குட்பட்ட சேந்தமங்கலம் ஊராட்சியில் சுமாா் 2 ,000-க்கு மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், சா்வே எண் 21-இல் சுமாா் 5 ஏக்கா் பரப்பளவில் ஜல்லிக்குழி அரசு புறம்போக்கு இடத்தில் ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் 7 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சேந்தமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஜல்லிக்குழி அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்த பொடவூா் ஊராட்சியை சோ்ந்த சிலா் அப்பகுதியில் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனா். மேலும் சிலா் அந்த இடத்தை விற்பனை செய்து வருவதாக தெரிகிறது.

இதனால் சேந்தமங்கலம் ஊரட்சிக்கு வரும் காலங்களில் வளா்ச்சிப் பணிகளுக்கான கட்டடங்கள் கட்ட போதுமான இடம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் பல முறை வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை.

எனவே வருவாய்க் கோட்டாட்சியா் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com