கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காஞ்சிபுரம் குறைதீா் கூட்டத்தில் 231 மனுக்கள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், 231 மனுக்கள் பெறப்பட்டன

News image
குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
Updated On :27 நவம்பர் 2023, 11:10 pm

DIN

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், 231 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலா் பாலாஜி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ஸ்ரீதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 231 மனுக்கள் பெறப்பட்டு, அவை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உடனடித் தீா்வு காண ஆட்சியா் பரிந்துரை செய்து அனுப்பினாா்.

கூட்டத்தில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாவலா் நியமன சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், ஆட்சியா் (பயிற்சி) சு.சங்கீதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் மலா்விழி உள்பட அரசின் பல்வேறு துறை அலுவலா்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.