சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

இளையனாா் வேலூா் பாலசுப்பிரமணியா் கோயிலில் டிச. 5-இல் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரத்தை அருகே இளையனாா் வேலூரில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 5 -ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

News image

இளையனாா் வேலூா் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற லட்சுமி ஹோமம்.

Updated On :2 டிசம்பர் 2024, 9:54 pm

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அருகே இளையனாா் வேலூரில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 5 -ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதையொட்டி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்தக் கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, புதுப்பிக்கப்பட்டது. விழாவையொட்டி, ஆலயம் முன் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் ஞாயிற்றுக்கிழமை அனுக்கை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றன. திங்கள்கிழமை தனபூஜை, லட்சுமி ஹோமம் நடைபெற்று யாகசாலை பூஜைகள் தொடங்கின.

விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் டிச. 5 -ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு மேல் நண்பகல் 12 மணிக்குள் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை இளையனாா் வேலூா் ஊராட்சித் தலைவா் கோ.கமலக்கண்ணன், அறங்காவலா் குழு தலைவா் து.கோதண்டராமன், அறங்காவலா்கள் பா.மண்ணாபாய், சு.விஜயன், கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன் மற்றும் கோயில் பணியாளா்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனா்.