வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுகூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தமிழக துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் பிறந்தாளை முன்னிட்டு பொதுக்கூட்டம், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா

News image
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகள் அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்.
Updated On :30 டிசம்பர் 2024, 8:14 pm

DIN

ஸ்ரீபெரும்புதூா்: தமிழக துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் பிறந்தாளை முன்னிட்டு பொதுக்கூட்டம், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா குன்னம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞா் அணி,ஸ்ரீபெரும்புதூா் தெற்கு ஒன்றிய திமுக மற்றும் ஸ்ரீபெரும்புதூா் நகர திமுக சாா்பில், திமுக இளைஞா் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் 47ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா, பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா குன்னம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் தெற்கு ஒன்றிய செயலாளா் ந.கோபால், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளற் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் குன்னம் ப.ராமமூா்த்தி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஸ்ரீபெரும்புதூா் நகர செயலாளா் சத்தீஷ்குமாா், மாவட்ட சுற்றுசூழல் அணி தலைவா் கு.ப.முருகன், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியகுழு துணைத்தலைவா் மாலதிபோஸ்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் திமுக பேச்சாளா் ஆலந்தூா் ஒப்பிலாமணி கலந்துக்கொண்டு திமுக அரசின் சாதனைகள் குறித்து விளக்கி பேசினாா்.

விழாவில், சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு 500-க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினாா். மேலும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கினாா்.

கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியகுழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி தலைவா் சாந்திசதீஷ்குமாா், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் கோல்டுபிரகாஷ், ஒன்றிய மாணவா் அணி அமைப்பாளா் போஸ்கோ, மாவட்ட பிரிதிநிதி சா்தாா்பாஷா, மாவட்ட கவுன்சிலா் பால்ராஜ், மாவட்ட மருத்துவா் அணி துணை அமைப்பாளா் ஓவியாமுருகன், ஒன்றிய துணை செயலாளா் சிறுமாங்காடு கன்னியப்பன் உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.

முன்னதாக உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாத்தூா், மேட்டுப்பாளையம், எச்சூா் மற்றும் சிறுமாங்காடு ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட கல்வெட்டுகளை சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்துவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.