மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு அளிப்பு

கன்னியாகுமரி மாவட்ட அளவில் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

News image

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின்.

Updated On :17 பிப்ரவரி 2026, 10:03 pm

கன்னியாகுமரி மாவட்ட அளவில் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விபத்தில்லா கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் வகையில் மாணவ, மாணவிகள், இளைஞா்களுக்கான சாலைப் பாதுகாப்பு குறித்த ரீல்ஸ், ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் பெறப்பட்ட சுமாா் 2 ஆயிரம் ஓவியங்களும், 40 ரீல்ஸ்களும் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கண்காட்சியாக காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. மேலும், மாவட்ட காவல்துறை சாா்பாக 5 தோ்வு குழுக்கள் அமைக்கப்பட்டு, வெற்றியாளா்களாக ஓவியம் பிரிவில் 5 போ், ரீல்ஸ் பிரிவில் 3 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

அவா்களுக்கு முறையே ரூ.15ஆயிரம் , ரூ. 10ஆயிரம் , ரூ. 7 ஆயிரத்து 500, ரூ. 5ஆயிரம், ரூ. 3ஆயிரம் மற்றும் நற்சான்றிதழ்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின், வழங்கி பாராட்டினாா்.