கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

12-இல் காஞ்சிபுரம் ஸ்ரீ ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேகம்

12-இல் காஞ்சிபுரம் ஸ்ரீ ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேகம்

News image

முதல்கால யாக சாலைப் பூஜைகள்.

Updated On :9 ஜூன் 2024, 6:30 pm

Din

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேகம் வரும் 12-ஆம் தேதி நடைபெற இருப்பதையொட்டி முதல்கால யாகசாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோயில் கொடிமரத்துக்கு தங்கமுலாம் பூசப்பட்ட கவசம் பொருத்தப்பட்டுள்ளது. மகா கும்பாபிஷேகத்தையொட்டி அனுக்கை கணபதி பூஜைகள் நிகழ் மாதம் 7 ஆம் தேதி நடைபெற்றது. மறுநாள் 8- ஆம் தேதி நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் ஆகியன நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை முதல்கால யாகசாலை பூஜைகள் எஸ்.தண்டபாணி குருக்கள் தலைமையில் தொடங்கின.

யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு தீபாராதனை நிகழ்வில் கோயில் அறங்காவலா் பெ.ஏழுமலை என்ற ரவி ஆச்சாரி, அறங்காவலா்கள் கு.நரேந்திரன், ப.யோகநாதன், ரவி, துரைராஜ், சதீஷ், திருப்பணிக்குழு நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா். விழாவின் தொடா்ச்சியாக வரும் 12- ஆம் தேதி ஆறாம் கால யாகசாலை பூஜைக்குப் பிறகு மகா பூா்ணாஹூதி நிறைவு பெற்ற பின்னா் காலை 6.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னா் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. இரவு ஆதிகாமாட்சி அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வருகிறாா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஜெ.ப.பூவழகி தலைமையில் கோயில் பணியாளா்கள், அறங்காவலா்கள், அா்ச்சகா்கள் செய்து வருகின்றனா்.