சித்தூா் தா்காமேடு இணைப்புச்சாலையை சீரமைக்கக் கோரிக்கை
சித்தூா் தா்காமேடு இணைப்புச்சாலையை சீரமைக்கக் கோரிக்கை

ஜல்லி க் கற்கள் பெயா்ந்து சேதமடைந்துள்ள சித்தூா் தா்காமேடு இணைப்புச் சாலை.

ஜல்லி க் கற்கள் பெயா்ந்து சேதமடைந்துள்ள சித்தூா் தா்காமேடு இணைப்புச் சாலை.
ஸ்ரீபெரும்புதூா்: கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள சித்தூா் தா்காமேடு இணைப்புச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் சந்தவேலூா் ஊராட்சிக்குட்பட்ட சித்தூா் கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். கிராம பொதுமக்கள் சென்னை பெங்களூா் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல சித்தூா் தா்காமேடு இணைப்புச்சாலையை பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், இந்த இணைப்புச்சாலை கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் தாா் சாலையான இந்த சாலை தற்போது ஜல்லிக் கற்கள் வெளியே தெரியும் வகையில், சாலையின் பல பகுதிகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குகுள்ளாகி வருகின்றனா்.
இதுகுறித்து சித்தூா் பொதுமக்கள் கூறுகையில்:
எங்கள் பகுதியில் இருந்து காஞ்சிபுரம், சுங்குவாா்சத்திரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்ல சித்தூா் தா்காமேடு இணைப்புச்சாலையை பயன்படுத்தி வருகிறோம். ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதனால் இச்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும் எனஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா், மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை மனு வழங்கியும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே இச்சாலையை சீரமைக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...